நான் குற்றமற்றவன்.. முன்னாள் அமைச்சர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் 2004-2005 காலக்கட்டத்தில் என்.டி.திவாரி தலைமையிலான அமைச்சரவையில், இணை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் பின்னர், சாலைவழி தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த இவர், கடந்தாண்டு அக்டோபர் 31-ம் தேதி ஓய்வுபெற்றார். 

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (மே 25) ராஜேந்திர பகுகுணா, தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து, ஊடகங்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி பங்கஜ் பட், “அரசியல்வாதியான ராஜேந்திர பகுகுணா தன் பேத்திக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவரது மருமகள் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (மே 25) காவல் நிலையைத்தை தொடர்புகொண்டு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை அவரது வீட்டுக்கு விரைந்து சென்றது. ஆனால் அவர் கையில் துப்பாக்கியுடன், ‘நான் குற்றமற்றவன், என் மருமகள் வீணாகப் பழி சொல்கிறாள்’ எனக் கூறிக்கொண்டே இருந்தார்.

அப்போது அவரை தடுக்க ஒலிபெருக்கியில் பேசி சமாதானம் செய்ய முயன்ற நிலையில், தன் மார்பில் சுட்டுக்கொண்டு தொட்டியில் விழுந்துவிட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மகன் அஜய் பகுகுணாவின் புகாரின் அடிப்படையில், அவர் மருமகள் ஆகியோரை தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்கில் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது” எனத் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை