அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மனித வள மேலாண்மை துறை கிடுக்கிப்பிடி உத்தரவு!!

 

 

தமிழகத்தில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து, 2016-ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதாவது 365 நாட்களாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, மகப்பேறு விடுப்பு தொடர்பான பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மகப்பேறு விடுப்பு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது.இந்நிலையில், மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், பின் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர இயலாது என்று மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. 

புதிய பணியிடத்தில் சேர்ந்தபின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்அரசு ஊழியர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர வழிவகை இல்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை