மெகா நியூஸ்!! அடுத்த 6 மாதங்களுக்குள் 42,000 பேருக்கு மத்திய அரசு வேலை!!! 

 

‘அக்னிபத்’ திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, ராணுவத்தில் இணையும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவ படையில் பணியாற்றலாம். அதன் பின்னர் 25 சதவீதம் பேர் மட்டும் தொடர்ந்து பணியில் நீடிப்பதுடன், 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அறிவித்தது. இதனால் தங்கள் கனவுகளை மத்திய அரசு சிதைக்கிறது என்று கூறி அக்னிபத் திட்டத்¬தை எதிர்த்து இளைஞர்கள் நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு துறைகளும் அக்னிபத் வீரர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து தங்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில், மத்தியப் பணியாளர் தேர்வாணையம்  சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இந்திய அரசில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் விரைவில் அளிக்கப்பட உள்ளன. வருகிற 6 மாதத்திற்குள் அதாவது 2022 ஆண்டு இறுதிக்குள் 15,247 பதவிகளுக்கான பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விடும். இதன் மூலம் 42,000 பேர் மத்திய அரசு வேலைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து 67,768 காலி இடங்களை நிரப்புவதற்கான செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது’’ என்று பதிவிட்டுள்ளது.


இதற்கு முன்னதாக கடந்த 14ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மொத்தம் 10 லட்சம் காலி பணியிடங்களை மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளன. அதற்கான நடவடிக்கை துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே வருகிற 6 மாதத்திற்குள்ளாக நிரப்பப்பட உள்ள மத்திய அரசு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை