நயன்தாரா திருமணத்தில் புது சர்ச்சை! வழக்கு பதிவு செய்து விசாரணை!

 

நயன்தாரா... நடிகையாக அறிமுகமான காலத்தில் இருந்தே சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது சரி.. கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் திருமணம் கடந்த 9ம் தேதி வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு கோலிவுட், பாலிவுட் மற்றும் அனைத்து திரையுலக பிரபலங்களும் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக இருந்து வந்த இவர்களின் திருமணம் குறித்த விவாதங்களுக்கு ஒரு வழியாக விடை கிடைத்து விட்டது.

திருமணத்தைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி திருப்பதிக்கு சென்ற நயன்தாரா,  விக்னேஷ் சிவன் ஜோடி கோவிலில் செருப்பு அணிந்து சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பகிரங்கமாக விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார். இருப்பினும் காலணியுடன் போட்டோ ஷ¨ட் நடத்தியதாக நயன்தாரா மீது கோவில் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதனால் தொடர்ந்து இவர்களின் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. 

இந்நிலையில், தற்போது ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. திருமணத்தின் போது கடற்கரை பொது இடம் என்பதால் அங்கு ஏன் பொது மக்களை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து நயன்தாரா -  விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை