ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான் வரீந்தர் சிங் காலமானார்!

 

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் தனிப்பட்ட பல சாதனைகளைப் படைத்தவர் வரீந்தர் சிங். தவிர, ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலகக் கோப்பை போட்டியிலும் வெற்றிப் பெற்று உலக கோப்பையை வென்றவர் வரீந்தர் சிங் காலமானார். அவருக்கு வயது 75.

முன்னாள் வீரரான வரீந்தர் சிங் 1972-ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் அணியில் அங்கம் வகித்துள்ளார். இதே போல் 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார். 

1973-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் வரீந்தர் சிங் இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். இது மட்டுமல்லாமல் 1974 மற்றும் 1978-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.


இவருக்கு 2007-ம் ஆண்டு மதிப்புமிக்க தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஹாக்கி இந்தியா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், “வரீந்தர் சிங்கின் சாதனைகள் உலகெங்கிலும் உள்ள ஹாக்கி சகோதரத்துவத்தால் நினைவுகூரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை