ப. சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு!! தொண்டர்கள் ஆவேசம்!!

 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதற்கான சம்மன் அனுப்பட்டதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 12 மணிவரை விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கொதித்தெழுந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ராகுல்காந்தியை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார்.

அங்கு குவிந்த போராட்டக்காரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ்காரர்களை கண்டுகொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசாருக்கும், ப.சிதம்பரத்திற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ப.சிதம்பரத்தை போலீசார் தள்ளியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் இடது கையின் விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை தள்ளிவிட்டு தாக்கிய போலீசார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக  முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை