நீச்சல் குளத்தில் ஆட்டம்! மாளிகைக்கு தீ வைப்பு! தப்பியோடிய இலங்கை அதிபர்! வைரலாகும் வீடியோ!

 

பற்றி எரிகிறது இலங்கை என்று விடுதலைப் புலிகளின் இலங்கை உடனான போரின் போது பத்திரிக்கைகள் தலைப்பு செய்திகளை எழுதின. நிஜமாக இப்போது இலங்கை பற்றி எரிகிறது. விடுதலைப் புலிகள் இலங்கை அதிபரின் அரசியலை எதிர்த்தப் போது இத்தனை கொந்தளிப்புகளும் சேதமும் கிடையாது. இப்போது இலங்கை பற்றி எரிகிறது. நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப பத்தாண்டுகளுக்கும் மேலாகும் என்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெருமளவில் வெடித்துள்ளது. மக்களின் கடும் போராட்டத்தின் காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பிறகும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சரியாகாத நிலையில், இலங்கை அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்யாததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச, பதவியிலிருந்து விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதனால், அதிபர் மாளிகையிலிருந்து கோத்தபய ராஜபக்ச தப்பிச் சென்றார்.


தொடர்ந்து, அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான சொகுசுக் கார்களைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில், போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளும், அங்கிருக்கும் கார்களை எடுத்து போராட்டக்காரர்கள் ஓட்டும் காட்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிபர் கோத்தபயவின் அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றினார்கள். 



இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலொன்றில், அவசர அவசரமாக கோத்தபய ராஜபட்சவின் உடமைகள் ஏற்றப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சி எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை வாயிலில் குவிந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் காயமடைந்தனர். இலங்கை அதிபரின் மாளிகைக்கும் போராட்டக்காரர்கள், கோபம் தணியாது தீ மூட்டி எரித்தார்கள். 

இராமாயண காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை இலங்கை கொளுந்து விட்டு எரிகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை