அமலாக்கத்துறையில் ராகுல்காந்தி நேரில் ஆஜர்!!  காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!!

 


நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் உள்ளிட்டோரால் யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது.

தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர்.  அந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க ஜூன் 2-ஆம் தேதி ராகுல் காந்தியையும், ஜூன் 8-ஆம் தேதி சோனியா காந்தியையும் ஆஜராகுமாறு அண்மையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. எனினும் தான் வெளிநாட்டில் இருப்பதால் வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ராகுல் காந்தி ஆஜராகியுள்ள நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் உள்பட மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை