விஷவாயு தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ15லட்சம் நிவாரண உதவி!!

 

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (வயது 26), ரவிக்குமார் (40) ஆகிய 2 பேரும் நேற்று சென்னை மாதவரம் 3-வது மண்டலம் 28-வது வார்டுக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே 2 பேரும் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக திடீரென்று விஷவாயு தாக்கியதில் தொழிலாளி நெல்சன் துரதிருஷ்ட வசமாக உயிரிழந்தார். உடன் சென்ற தொழிலாளி ரவிக்குமாரும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளானார். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக  108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், தொழிலாளி ரவிகுமார் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பொது மக்கள் அனுப்பி வைத்தனர். விஷ வாயு தாக்கியதில் ஆபத்தான நிலையில் ரவிக்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி நெல்சன் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளர் ஒருவர் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகமும், பதற்றமும் நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை