கதறித் துடித்த பெற்றோர்!! பள்ளி வாகனம் கவிழ்ந்து கோரவிபத்து!! 16 மாணவர்கள் படுகாயம்!!

 

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி வாகனங்களில் கவனக் குறைபாடு காரணமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் பள்ளி நிர்வாகங்களுக்கு மேலும் கவனத்துடன் செயல்பட கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் அவ்வப்போது பள்ளி வாகன விபத்துக்கள் தொடர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த வகையில் விருத்தாசலம் மாவட்டத்தில் போட்டி போட்டு சென்ற இரு தனியார் பள்ளி வேன்கள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துள்ளாகி இருக்கிறது.விருத்தாசலத்திற்கு  அருகே கோபாலபுரத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து கோரவிபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில்  16 மாணவர்கள் படுகாயம்  அடைந்துள்ளனர். தனியார் பள்ளி வாகனங்கள்  ஒன்றுக்கொன்று முந்திச் செல்வதில் போட்டா போட்டி நடைபெற்றதில்  ஒரு வாகனம் மீது மற்றொன்று மோதியது.

இதனால் பள்ளி வாகனங்கள்  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போட்டி போட்டு பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த  சாலை மறியலால் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வாகன விபத்தை அறிந்ததும் அலறி அடித்து ஓடி வந்த பெற்றோர்கள் கலங்கி கதறி துடித்தது காண்பவர்கள் நெஞ்சை கரைய வைத்தது. இனியாவது  பள்ளிப் பேருந்தை இயக்குபவர்கள் கவனத்துடன் செயல்படுவார்களா?!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!