undefined

அதிர்ச்சி!! 3 நாளில் 84 பேர் பலி!! வெப்ப அலையால் மக்கள் பெரும் அவதி!!!

 

 

தொடர்ந்து 3 நாட்கள் நிலவிய அதிகபட்ச வெப்ப நிலை காரணமாக 84 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டு மருத்துவ அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவ நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர்.ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் மருத்துவ நிறுவனம் தனது அறிக்கையை ஸ்பெயின் மருத்துவ அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கடந்த 10, 11, 12 ஆகிய 3 நாட்களில் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பம் நிலவி உள்ளது. 40 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் நிலவியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

மேலும் இந்த அதிகபட்ச வெப்பம் அடுத்த வாரம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி முதல் 20ம் தேதிவரையிலான கால கட்டத்தில் வெப்ப அலை காரணமாக மொத்தம் 829  பேர் உயிரிழந்து இருப்பதாக ஸ்பெயின் மருத்துவ அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44.5 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 


வெயிலின் கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும். மேலும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த அதிகபட்ச வெப்பநிலை இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என்பதால் அந்நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை