அதிர்ச்சி! அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்! பரந்த வெளியில் தவிக்கும் மக்கள்!

 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்த மக்கள் குடும்பம் குடும்பமாக சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே அந்த பகுதிகளில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது.

இன்று காலை 5.57 மணியளவில் நிக்கோபார் தீவுகளில் இருந்து போர்ட்பிளேர் 215 கிமீ இஎஸ்இ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.0 ஆக பதிவாகியுள்ளது. 


மேலும் வளைகுடாவில் இருந்து 44 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கண்டுடறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இன்று அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.

இவ்வாறு கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மொத்தம் 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்தனர். இதனால் மூட்டைமுடிச்சுகளுடன் சாலையில் குடும்பம் குடும்பமாக தஞ்சம் அடைந்தனர். மேலும் பரந்தவெளிகளிலும் பாதுகாப்பு தேடிச் சென்றனர். இதனால் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் பதற்றம் நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை