undefined

இன்று ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி  சுற்றுப்பயணம்!!

 

தமிழகத்தின்  முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் சாதனை விளக்கக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் மாவட்டவாரியாக துறை ரீதியான தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி திட்ட பணிகளை மேலும் தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதல்வர் .ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை செல்ல இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இவர் சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக செல்லும் முதல்வர் இன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 

அங்கு சென்று, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார். இதனையடுத்து இரவில் முதல்வர் மதுரையிலேயே தங்கும் நிலையில், நாளை அங்கிருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை செல்கிறார். 

சிவகங்கையில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கும் முதல்வர், நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

இதனையடுத்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு இரவு 8 மணியளவில் திருச்சி செல்கிறார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை முதல்வர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை