அசத்தல்! நம்ம மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம்! புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார்!
தமிழக காவல்துறை சார்பில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக 20 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையம் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மொத்தம் இதுவரை 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றை தோற்றுவித்த பெருமை முன்னாள் முதல்வர் கலைஞரையே சேரும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021&-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம்,
தாம்பரம் மாநகரம் - சேலையூர்,
ஆவடி மாநகரம் - எஸ்ஆர்எம்சி
தாம்பரம் மாநகரம் - வண்டலூர்
வேலூர் மாவட்டம் - காட்பாடி
திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை ஊரகம்
கடலூர் மாவட்டம் - திட்டக்குடி
கரூர் மாவட்டம் - கரூர் ஊரகம்
புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைபட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு
திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை
கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம்
ஈரோடு மாவட்டம் - பெருந்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை
மதுரை மாவட்டம் - ஊமச்சிக்குளம்
திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஊரகம்
தேனி மாவட்டம் - பெரியகுளம்
ராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர்
திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மாதேவி
தென்காசி மாவட்டம் - புளியங்குடி
என 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!