விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து! அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் தப்பினர்!

 

கடலோடு தான் எங்கள் வாழ்வு என்று ஆனந்தமாக மீனவர்கள் பாடினாலும், தினம் தினம் நிச்சயமற்ற வாழ்வாகவே மீனவர்களின் வாழ்நாள் கடந்து போகிறது. அரசு எத்தனைத் தான் மீனவர்களின் நலன் காக்க திட்டங்களைத் தீட்டினாலும், அவை முழுவதுமாக அவர்களைப் போய் சேர்கிறதா என்பது கேள்வி குறி தான். ஒரு சுனாமி பேரலை மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே சுருட்டி போட்ட நிலையில், அதிலிருந்து இன்னமும் பல்லாயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் மீள முடியாமலேயே இருக்கின்றனர்.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவே இலங்கை கடற்படையினரின் அட்டூழியம், எல்லை தாண்டும் பிரச்சனை, மீன் பிடி தடைக்காலம், இயற்கை சீற்றங்களான மழை, புயல், சூறாவளி காற்று என்று பல பிரச்சனைகளைச் சந்திக்கின்ற வாழ்வு அவர்களுடையது.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் 7 மீனவர்கள் மீன் பிடிக்க கடலின் நடுப் பகுதிக்கு சென்ற போது, எதிர்பாராத விதமாக அவர்கள் சென்று கொண்டிருந்த விசைப் படகு சேதமடைந்து கடலில் அப்படியே மூழ்கியது.

நல்ல வேளையாக உடன் அருகிலேயே வேறு சில மீனவர்கள் இருந்ததால், உடனடியாக சேதமடைந்த விசை படகில் மீன் பிடிக்கச் சென்றவர்களை, சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு அழைத்து வந்தனர். இந்த விபத்தில், விசைப்படகுடன் சேர்த்து, சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை