எக்குதப்பாக உயர்ந்த தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது இதன் பிறகு படிப்படியாக இயல்பு நிலை திரும்பினாலும் அனைத்து பொருட்களும் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து, ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ரூ.38,480-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,940-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் உயர்ந்து, ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை