undefined

தலைக்குப்புற விழுந்த ஜீப்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!

 

தலைக்குப்புற விழுந்து உருண்ட ஜீப்... சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அயோத்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்தார்கள். சுற்றுலா பயணிகள் சென்ற ஜீப், 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளால் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகள் 11 பேர் கொண்ட குழு ஒன்று, கர்நாடக மாநிலம் பெலகாவி நகருக்கு செல்ல ஜீப்பில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கல்யாழா பகுதியில் ஜீப் வந்துகொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் இருந்த  20 அடி பள்ளத்தில் ஜீப் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஜீப்பில் பயணித்த பயணிகள் வாகனத்திற்குள் உருண்டு உயிர் பயத்தில் கூச்சலிட்டனர்.


இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணித்த 11 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் ஜீப்பை அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக ஜீப் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. எனவே வேகமாக சென்ற ஜீப் பள்ளத்திற்குள் விழுந்து பெரும் விபத்தை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஜீப் ஓட்டுநர் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டினாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து அதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை