மிக விரைவில் உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்!! ஐநா எச்சரிக்கை!!

 

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு உணவுப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வடகொரியா உட்பட பல நாடுகள் உணவுத்  தட்டுப்பாட்டால் பெரும் அவதிப்பட்டு வருகின்றன. இது குறித்து ஐநா எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் மிகவிரைவில்  உலகம் பேரழிவை சந்திக்கும்.  அதன் பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது . பருவநிலை மாற்றம், கொரோனா இவைகளால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இவைகளால் உலகம் முழுவதும்  கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்ய போரால் நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது.  இதே போல் சில தினங்களில் உணவுத் தட்டுப்பாட்டால் மேலும் பல  நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும். ஓரிரு ஆண்டுகளில் இந்த உணவு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கக் கூடும்.

ஏற்கனவே  குட்ரெஸ், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் வேளாண் பணிகளுக்கு தேவையான உரம், எரிபொருள் விலை உயர்வுகளை  சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றன. 2023ம் ஆண்டில் உணவு பஞ்சம் தீவிரமடையும் எனவும்,  சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஐநா. அமைப்பின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விவசாய உற்பத்தியை பெருக்கவும், அவர்களின்  நிதி ஆதாரத்தை மேம்படுத்தவும் தேவையான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன் உணவு சந்தையை பலப்படுத்த தனியார் துறைகளும் முன் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை