திரையுலகில் தொடரும் சோகம்!! விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!! 

 

தமிழ் திரையுலகின்  முண்ணனி கதாநாயகனும், தேமுதிக தலைவருமான  நடிகர்  விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். 


வீட்டில் ஓய்விலேயே இருந்து வரும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வபோது மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.  அதன்படி நேற்றிரவு  சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

விஜயகாந்த் வழக்கமான  பரிசோதனைக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக  தலைமை கழகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. தலைவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி கொள்வதாக தேமுதிக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை