காசநோய் கண்டறியும் டிஜிட்டல் வாகன சேவை!! முதல்வர் தொடங்கி வைப்பு!!

 


காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை நொச்சிக்குப்பத்தில் 10 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025” என்ற திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக  10.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 மாவட்டங்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 நடமாடும் வாகனங்களை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 முன்னதாக, மருத்துவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சட் பின்னர் நடமாடும் வாகனத்தின் செயல்பாட்டினையும் பார்வையிட்டார். 
அதனை, தொடர்ந்து காச நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கி அவர்கள் விரைவில் குணமாக உதவி செய்த 100 தன்னார்வளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்,  மற்றும் சிறப்பாக செயல்பட்டு காசநோய் விகிதத்தை குறைத்ததற்காக 8 மாவட்டங்களுக்கு பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் செந்தில் குமார், அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்    உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகள் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை