இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!! வெளியான சிசிடிவி வீடியோ!!

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில்  கொளப்பாடு என்னும் இடத்தில் பெட்ரோல் பங்க்  உள்ளது. இதன் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.


அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில்  அதி வேகமாக  வந்த இளவரசநல்லூர் பகுதியை சேர்ந்த   ஜெயக்குமார்  என்பவர்  சேகரின் இருசக்கர வகனத்தின் மீது அதி வேகமாக மோதியுள்ளர். இதில் தூக்கி வீசப்பட்ட சேகர் பலத்த காயமடைந்தார்.

 இந்நிலையில்  காயமடைந்த சேகரை மீட்ட அப்பகுதி மக்கள் 108  ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த  வலிவலம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது  வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை