வீடியோ!! அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம்!!

 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த மாதத்தில் போராட்டம் வெடித்தது. பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச விலகினார். அவரை தொடர்ந்து , ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

ஆனால் அவர் பதவியேற்ற பின்னும் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. தற்போதும் பல நாட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்ததால் நேற்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு அமல்படுத்தியது. ஆனால் இன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். 

ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் மக்கள் அதனை மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை சூறையாடப்படுவதாகவும், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இலங்கை எம்.பி ரஜிதா சேனரத்னாவை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கோத்தபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார். இருப்பினும், போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்த நிலையில் நேற்று இரவே கோத்தபய ராஜபக்ச ராணுவ தலைமையகத்துக்கு தப்பி சென்றதாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது


போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை சூறையாடினர். தலைமை செயலகத்தையும்  போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.  கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் அறை அலமாரியில் சுமார் 17 மில்லியன் ரூபா பணம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 
கிடைத்த பணத்தை செயற்பாட்டாளர்கள் எண்ணி ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். போராட்டக்காரர்கள்  பலரும், அங்கு  கிடைத்த பணத்தை முறையாக கணக்கிட்டு உரிய பொறுப்பு வாய்ந்த துறைகளிடம் ஒப்படைத்திருப்பது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இது குறித்து  ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு அதிகாரியும்  பணம் பெறப்பட்டதை உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் எந்த நோக்கத்திற்காக பணம் அங்கு வைக்கப்பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படும் என  ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை