undefined

வீடியோ!! வீடு திரும்பினார் விக்ரம்!! ரசிகர்களுக்கு நன்றி!! 

 

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்களில் முன்னணி நடிகர் நடிகர் விக்ரம். இவர் தமது கடின உழைப்பினால்  சினிமாவில் டப்பிங் கலைஞராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர். சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களினால் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். இந்த மாதிரியான  ரிஸ்க்குகளை தமிழ் சினிமாவில் , வேறு எந்த நடிகரும் எடுத்ததில்லை என்றே சொல்லலாம். 


கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்தவர் நடிகர்  விக்ரம்.தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். இரண்டு படங்களும் வெகுவிரைவில் திரைக்கு வர உள்ளன. இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் இவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.


இந்நிலையில் திடீரென நடிகர் விக்ரமுக்கு 2 தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி திரையுலகை மட்டுமல்ல அவரது ரசிகர்களையும் கதிகலங்க வைத்தது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டு வந்தனர். 
இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகம்,  “நெஞ்சுவலியால் அசெளகரியம் ஏற்பட்டு நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்


 அவருக்கு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்”  எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உடல்நலம் குணம் அடைந்து நடிகர் விக்ரம் வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமின் ரசிகர்களும், நலன் விரும்பிகளும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை