undefined

 மதுரையில் 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் தற்கொலை ... பெரும் பரபரப்பு!  

 
 

மதுரை சம்பக்குளம் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.புதூர் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட அந்த பகுதியில் வசித்து வருபவர் வடிவேல், தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவரது மனைவி கிருத்திகா மற்றும் 15 வயதான மகன் யுவன் ஆகியோர் உடன் வசித்து வந்தனர். மேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த யுவன், தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

நேற்று காலை பெற்றோருடன் ஏற்பட்ட சிறிய தகராறைத் தொடர்ந்து, அவர்கள் கோவிலுக்கு சென்றபோது யுவன் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், யுவன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர்.

தகவலறிந்த கே.புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, யுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?