undefined

அதிர்ச்சி வீடியோ... அழுக்கு உடை, தலையில் மூட்டையுடன் வந்த விவசாயிக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு!  

 

இந்தியா முழுவதும் பெருநகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூருவிலும் மெட்ரோ பொதுபோக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயணிப்பதற்காக  ஏழை விவசாயி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவசாயி  மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.  

 இந்த வீடியோவை  அங்கிருந்த பயணி ஒருவர்  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள்  பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதா? எனக் கூறிவருகின்றனர்.  இந்நிலையில், விவசாயியை பயணம் மேற்கொள்ள இடையூறு செய்த பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணிநீக்கம் செய்வதாக  பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம்  மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!