அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரியில் பயங்கர தீவிபத்து... பகீர் வீடியோ... !
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து அயோத்திக்கு பக்தர்கள் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து அயோத்தி கும்பாபிஷேக கொண்டாட்டத்திற்காக பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பட்டாசுகள் லாரியில் சென்ற நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
அத்துடன் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.தொடர்ந்து 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழாவுக்காக, பட்டாசு ஏற்றப்பட்ட லாரி அயோத்திக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பட்டாசு லாரி தீப்பிடித்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!