ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி... காப்பாற்ற சென்ற சித்தப்பாவும்  உயிரிழப்பு! 

 
 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுல்தானியா தெருவைச் சேர்ந்த அசன் முகமது (30) தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சாஜிதா பானுவுடன் வசித்து வந்த அவர் குழந்தையில்லாதவர். அசன் முகமதுவின் அண்ணன் தையூம் அன்சாரி (34) டெய்லராக பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி அனிஷ்பாத்திமா (37) மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மகள் ரம்ஜான் பேகம் (13) உட்பட குடும்பத்தினர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக அலங்கியம் சென்றிருந்தனர்.

நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன், குடும்பத்தினர் பலரும் அலங்கியம் அருகே உள்ள செலாம்பாளையம் பகுதியில் அமைந்த அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, ரம்ஜான் பேகம் தவறி ஆழமான நீரில் விழுந்து தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற அசன் முகமது நீரில் குதித்தார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கினர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று உள்ளூர்வாசிகளுடன் இணைந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். இந்த துயரச் சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!