undefined

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,000... சாமந்தி விலையும் எகிறியது!

 

ஆயுதபூஜை, விஜயதசமி என பண்டிகைகள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பூக்களின் விலை எகிறியது. மதுரையில் மல்லிகை பூ கிலோ ரூ.2,000க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

மதுரையில் எம்ஜிஆர் பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், சத்திரப்பட்டி, உசிலம்பட்டி, வலையங்குளம், நிலையூர் உட்பட  மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் இந்த பூ மார்க்கெட்டுக்கு  விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அண்டை மாவட்டங்களான விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை  பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

மதுரை மலர் சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், துபாய்  நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுரை மண்ணில் விளையும் மல்லிகை பூக்கள் அதன் தரம், மணம் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 2000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.   

பிச்சி ரூ.600க்கும், முல்லை ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1200, ரோஸ் ரூ.250-க்கும், பட்டன் ரோஸ் ரூ.280, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.500, மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இது குறித்து மாட்டுத் தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன்  “மல்லிகைப்பூ வரத்தை பொறுத்தவரை சுமாராகதான் உள்ளது. இன்று மட்டும் மூன்றரை டன்னில் இருந்து நான்கு டன் வரை பூக்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி என்பதால் பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?