200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி ... பெரும் சோகம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைப்பகுதியாகிய கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்ட தீவிர லாரி விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் வாகனம் இன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 28ம் தேதி, வெளியூரில் இருந்து டீசல் ஏற்றி வந்து கொடைக்கானலில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிய போது, "டம் டம் பாறை" அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வீக்கெண்ட் விடுமுறை மற்றும் வாகன நெரிசல் காரணமாக, கடந்த 6 நாட்களாக லாரி மீட்பு பணி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று, மலை சாலையில் வாகன நெரிசல் குறைந்திருந்த நேரத்தில், ராட்சத கிரேன் கொண்டு லாரி மீட்பு பணி தொடங்கப்பட்டது. லாரி மீட்பு பணிக்காக சாலையின் இரு புறங்களிலும் வாகன ஓட்டம் நிறுத்தப்பட்டதால், சுமார் 2 மணி நேரம் மலைசாலை முழுவதும் போக்குவரத்து முடங்கியது.
இரு புறங்களிலும் 1 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இங்கு தொடர்ந்து ஏற்படும் வாகன விபத்துகள் குறித்து மருத்துவ அவசர உதவிகள், பாதுகாப்பு சுவர், சாலை அடையாளங்கள் போன்றவை தேவையாக உள்ளன எனவும், மலைப்பாதை பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!