காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது... இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததற்கு அமைவாக, இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று முழு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதன் தாக்கம் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளை அப்பால் உள்ள பகுதியில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதிலும் பல இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடியுடன் கூடிய மிதமான மழை அல்லது கனமழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?