undefined

ஓயாத கடன் தொல்லை.. 3 குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை!

 

 கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஜந்துபாரா பகுதியை சேர்ந்தவர் ஜேசன் தாமஸ். பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு கடன் பிரச்னை மற்றும் குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஜெய்சன் கருணை காட்டாமல் மனைவி மற்றும் 10 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு நேற்று தானும் தற்கொலை செய்து கொண்டார். பின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜேசன் தாமஸ் அத்தகைய முடிவிற்கான காரணம் குறித்து விசாரித்தனர். இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கடன் பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!