காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை!

 

தூத்துக்குடி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் செல்வராஜ் மகன் சுதாகர் (21). கூலித்தொழிலாளியான இவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து சுதாகர் தனது காதல் மனைவியுடன் பாவூர்சத்திரத்திலேயே தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

ஆசை ஆசையாக காதல் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. இதனால் மனவேதனை அடைந்த சுதாகர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சுதாகர் திடீரென விஷம் குடித்துவிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சுதாகர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?