பகீர்... கூலித் தொழிலாளிக்கு ரூ.2.76 கோடி வரி கேட்டு நோட்டீஸ்!
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (30) செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு செங்கல்பட்டு ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வந்தது.
அதில், சென்னை பல்லாவரத்தில் “ஏ.எம்.ஆர் டிரேடர்ஸ்” என்ற நிறுவனத்தை ராஜ்குமார் நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 82 ஆயிரத்து 898 ரூபாய் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், உடனடியாக ஆஜராகி அந்த தொகையை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட ராஜ்குமார் அதிர்ச்சியடைந்து உடனடியாக உம்ராபாத் போலீசில் புகார் அளித்தார்.
பின்னர், திருப்பத்தூர் எஸ்பி அலுவலக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அவர் அறிவுறுத்தப்பட்டார். ராஜ்குமார் கூறுகையில், “எனது ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை யாரோ மர்ம நபர்கள் பயன்படுத்தி, என் பெயரில் போலியான நிறுவனம் தொடங்கி ரூ.2.7 கோடி வரி மோசடி செய்துள்ளனர். இதனால் ஜிஎஸ்டி அலுவலகம் என்னிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!