வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர்.. விமானத்தில் இருந்து விரட்டி விட்ட ஊழியர்கள்!

 

டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் விமானத்தின் வணிக வகுப்பில் பயணிக்க டிக்கெட் பதிவு செய்திருந்ததாகவும், தொழில் நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண் பயணியை விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானத்தின் கேப்டன் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பெண் பயணி கீழே இறக்கி விடப்பட்டார். இதனால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. இச்சம்பவம் கடந்த 5ம் தேதி நடந்தது.

ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வணிக வகுப்பில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், அவரிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்று வேறு விமானத்தில் அனுப்பப்பட்டதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா விமானத்தில் ஏறுவதற்கு 894 பயணிகளுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடாக சுமார் 98 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!