undefined

 ‘ரீல்ஸ்’ மூலம் மிரட்டியவரை கொலை செய்ய திட்டம்... ஆயுதங்களுடன் பதுங்கிய 4 பேர் கைது!

 
 

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ‘ரீல்ஸ்’ மூலம் மிரட்டியவரை கொலை செய்ய திட்டமிட்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவொற்றியூர் டிஹெச். ரோட்டில் உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சிலர் கத்தியுடன் பதுங்கியிருப்பதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் 4 பேரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அந்தப் பகுதியில் வசிக்கும் தீபக் என்ற நபரை கொலை செய்ய லோகேஷ்வரன் (20), ஜெயராஜ் (20), பார்த்திபன் (22), மேலும் 17 வயது சிறுவன் ஆகிய நால்வரும் திட்டமிட்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது.

இதற்குக் காரணமாக, மாயாண்டி என்ற மனோஜ்குமார் கடந்த மாதம் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள தேவா என்பவரின் உறவினர் தீபக் ஆவார். அவரை குறிவைத்து, மாயாண்டியின் ஆதரவாளரான லோகேஷ்வரனைப் பற்றி “நீயும் சீக்கிரம் சிக்கப் போகிறாய்” என தீபக் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த லோகேஷ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீபக்கை கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீசார் கூறினர்.

பிடிபட்ட லோகேஷ்வரன் மீது 9 வழக்குகள், ஜெயராஜ் மீது 3 வழக்குகள், பார்த்திபன் மீது 2 வழக்குகள் இருப்பது விசாரணையில் வெளிவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சிறார் நீதிக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!