அதிகாலையில் திடீர் தீ விபத்து... மருத்துவரின் மனைவி பலி... !
சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகர் 2வது பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் முதல் தளத்தில் மருத்துவர் ஆனந்த் பிரதீப், அவரது மனைவி சசிபாலா (58), மகள் மற்றும் மகன் ஆகிய நால்வரும் வசித்து வந்தனர். இன்று (30.10.2025) அதிகாலை 4 மணியளவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ ஹால் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவி விட்டது.
தீயால் ஏற்பட்ட புகை வீட்டை முழுவதும் மூடியதால், உள்ளே இருந்தவர்களுக்கு வெளியே வர முடியவில்லை. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் பயனின்றி தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டிற்குள் மயங்கிய நிலையில் இருந்த சசிபாலா உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர் ஆனந்த் மற்றும் அவரது இரு குழந்தைகள் ஒரு அறையில் தஞ்சமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கு மின்கசிவே காரணமா என்பது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!