சிப்பிக் காளான் உற்பத்தியில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகணேஷ், எம்.பி.ஏ பட்டம் பெற்ற பிறகு வேலையைத் தேடாமல் சுயதொழில் செய்ய முடிவு செய்தார். அதன்படி, சிப்பிக் காளான் உற்பத்தியைத் தொடங்கி தற்போது சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
வீட்டிற்கு அருகில் 400 சதுர அடியில் இரண்டு கொட்டைகள் அமைத்து, காளான் விதைகளை பதப்படுத்தி 20 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்கிறார். இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறார். அறுவடை, பேக்கிங் மற்றும் விநியோகப் பணிகளில் அவரது தாய், தந்தை, தம்பி ஆகியோர் உறுதுணையாக இருக்கின்றனர்.
பாலகணேஷ் உற்பத்தி செய்யும் சிப்பிக் காளான்கள் நெல்லை, கல்பட்டு, வள்ளியூர், நாகர்கோவில், அம்பாசமுத்திரம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், ஆன்லைன் ஆர்டர்களின் மூலம் மற்ற மாவட்டங்களுக்கும் விநியோகித்து வருகிறார். தனது உழைப்பும் புதுமையும் மூலம் சுயதொழிலில் வெற்றி பெற முடியும் என்பதற்கான உதாரணமாக பாலகணேஷ் விளங்குகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!