பகீர் வீடியோ... ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர்... அடுத்து நடந்த விபரீதம்!
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ரயில்வே கிராசிங்கை வந்தடைந்தார். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ஆனால் அவர் விதிகளை மீறி, கேட் அடியில் நுழைந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.
இந்த பயங்கரமான காட்சி அங்கு இருந்தோர் எடுத்த வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தகவலின்படி, 2023-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 2,483 ரயில்வே கிராசிங் விபத்துகள் நடந்துள்ளன. அதில் உத்தரப் பிரதேசம் மட்டுமே 1,025 விபத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவற்றில் 1,007 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.இந்த சம்பவம், மூடிய ரெயில்வே கேட்டை மீறி தண்டவாளம் கடக்கும் ஆபத்தான பழக்கத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகள் மீண்டும் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!