திருச்செந்தூரில் நடுரோட்டில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

 

திருச்செந்தூரில் பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே பிரதான சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் ஒரு வாலிபரை 3பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வழிமறித்தது. இதையடுத்து அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பியோடியுள்ளார். ஆனாலும்  அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்றது. 

பின்னர் அந்த வாலிபர் அங்குள்ள மரக்கடைக்குள் ஓடி தப்பிக்க முயன்றார். ஆனாலும், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசேததனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை சுனாமி காலனியைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது. இவர் இன்று காலை ஆலந்தலையில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்தில் வந்துள்ளார். பஸ்சில் இருந்து இங்கியதும் அவரை 3பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட மணிகண்டன், 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமி மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனது அக்கா வீட்டை விட்டுச் சென்றதற்கு மணிகண்டன்தான் காரணம் என்று அவரது தம்பியான 15 வயது சிறுவன் கருதியுள்ளார். 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த சிறுவன் தனது நண்பர்கள் 2பேருடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து 3 சிறுவர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?