ஆடிவெள்ளி... அதிகாலை முதலே அம்மன் கோயில்களில் குவிந்த குவிந்த பக்தர்கள்!
Jul 26, 2024, 07:12 IST
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவே பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் சமயபுரத்தில் குவிய தொடங்கினார்கள். பலரும் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். திருச்சி மட்டுமல்லாமல் மேல்மருவத்தூர், சென்னை திருவேற்காடு, மாங்காடு, மயிலாப்பூர் கற்பகாம்மாள், காஞ்சிபுரம் காமாட்சி, திருவெற்றியூர் வடிவுடையம்மன், மதுரை மீனாட்சி என்று சக்தி தலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா