undefined

அப்துல்கலாம் 95 வது பிறந்தநாள்...   சரித்திர நாயகன்   நினைவுகளை போற்றுவோம்! 

 
 

இந்தியாவின் கடைக்கோடி கிராமமான ராமேஸ்வரத்தில் 1931, அக்டோபர் 15ல்  பிறந்தவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் . இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதன்மை குடிமகனாக குடியரசு தலைவராக உயர்ந்தவர். இன்று அக்டோபர் 15ம் தேதி இந்தியாவின் 11 வது குடியரசு தலைவரான டாக்டர் அப்துல்கலாமின்  பிறந்த நாள்.அப்துல்கலாம் ஆசிரியர், குடியரசுத் தலைவர், அறிவியலாளர், என பன்முகத் திறமை வாய்ந்தவர். இவர் ராமேஸ்வரத்தில் பள்ளிக்கல்வியும், திருச்சியில் கல்லூரியில் இயற்பியலும், சென்னை எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியலும் பயின்றவர்.

 


 
அப்துல்கலாம் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் பொறியாளராக பணிபுரிந்தவர்  1980ல் எஸ்.எல்.வி -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. மேலும் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இவர் 5 ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்தவர்.   2002 முதல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பத்ம விபூஷன், பாரத ரத்னா உட்பட 14 சிறந்த தேசிய விருதுகளை வென்றவர். அப்துல்கலாமின் எளிமையான வாழ்க்கை, இனிமையான பேச்சு மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது . செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களின் கனவுகளுக்கு உற்சாகப்படுத்துபவராக வாழ்ந்து வந்தார்.

 


 இவர் ஜூலை 27, 2015ல் இந்தியாவில் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐஐஎம் நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இளைஞர்களிடையே சாதிக்க வேண்டும்’ என்ற கனவையும், ‘உறுதியாக சாதிப்போம்’ என்கிற நம்பிக்கையும் விதைத்தவர். அதற்காக தம் வாழ்நாளின் இறுதிவரை ஓயாத உழைப்பை கொடுத்தவர்.  சாமானியராக பிறந்து சரித்திரமாக வளர்ந்த அப்துல்கலாமின் கருத்துக்களை நமது வாழ்க்கை நெறிகளால் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தருவோம். அதுவே அவருக்கு நாம் ஆற்றும் கடமை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!