அபிஷேக் சர்மா உலக சாதனை... டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள்!
இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபாரமான உலகச் சாதனையை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 13 பந்துகளில் 23 ரன்கள் குவித்த அவர், டி20யில் மிகக் குறைந்த 528 பந்துகளில் 1,000 ரன்களை கடந்த முதலாவது வீரராக உயர்ந்துள்ளார்.
இந்த சாதனையால், அபிஷேக் சர்மா டெஸ்ட் விளையாடும் முழுநேர நாடுகளின் வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில், இங்கிலாந்தின் பில் சால்ட் 599 பந்துகளில், ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 1,000 ரன்களை கடந்திருந்தனர்.
இன்னிங்ஸ் அடிப்படையில் பார்த்தால், விராட் கோலி இதற்கு முன் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த சாதனையைப் பெற்றிருந்தார். இப்போது அபிஷேக் சர்மா அதை முறியடித்து, டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய அத்தியாயம் எழுதியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!