தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து விபத்து ... 2 தொழிலாளர்கள் காயம்!
மேட்டூர் அருகே கருமலைக்கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் கடுமையாக காயமடைந்தனர்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30) நடத்தும் தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று, பழுதடைந்த மெக்னீசியம் அரைக்கும் தொட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஸ் ராம் (38), சர்வன் பஸ்வான் (38) ஆகியோருக்கு திடீரென ஆசிட் தொட்டி வெடித்ததில் கடுமையான காயம் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் உடனடியாக அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ பரவலை கட்டுப்படுத்தினர். தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்தது. கருமலைக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணையில், 4 டன் மெக்னீசியம் ஆக்சைடு கலந்த மண் மற்றும் சல்ஃபுரிக் ஆசிட் சேர்க்கப்பட்ட தொட்டியில் குழாயை தீயில் காட்டி சரிசெய்யும் போது வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!