’பிரபல நடிகை குறித்து சர்ச்சை பேச்சு’.. முன்னாள் அதிமுக நிர்வாகிக்கு இயக்குநர் சேரன் கடும் கண்டனம்!
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளராக ஏ.வி.ராஜு இருந்தார். இவர் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளரான சேலம் நகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக வெங்கடாசலம் மீது குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், பிரபல முன்னணி நடிகை குறித்த அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேச்சுக்கு இயக்குநர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரன் இது தொடர்பாக கூறியதாவது: -
அ.தி.மு.க. பிரமுகரின் பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆதாரமும் இல்லாமல் திரையுலகத்தை பொதுவெளியில் அவதூறு செய்த அவர் மீது சட்டமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் உரிய பதில் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்’’ என நடிகர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோரையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!