நடிகர் அஜீத் குமார் திருப்பதியில் சாமி தரிசனம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கார் ரேஸ்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் அஜித்தின் கேரியரில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்துக்குள் நுழைந்தபோது அவரைக் கண்ட ரசிகர்கள் “தல... தல...” என உற்சாகக் கோஷம் எழுப்பினர். அதற்கு பதிலாக, “இது கோவில்” என சைகை செய்து அமைதியை கேட்டுக் கொண்டார். அவரது இந்த நடத்தை அங்கு இருந்த பக்தர்களின் பாராட்டைப் பெற்றது.
சில நாட்களுக்கு முன், அஜித்குமார் தனது குடும்பத்துடன் கேரளாவின் ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் கோவிலிலும் தரிசனம் செய்திருந்தார். ஆன்மீகப் பயணங்களுக்கும், எளிமையான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்ற அவரின் இந்தச் செயல் மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!