”ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி”.. அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்..!

 

ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஜன. 22) நடைபெறுகிறது. மதியம் 12.20 மணிக்கு கோவிலின் கருவறையில் ராமர் சிலை வைக்கப்படுகிறது. இதில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த அயோத்தி - ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர நிர்வாகிகள் ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை கொடுத்தனர். இந்நிலையில் இன்று (ஜன. 21) நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார். முன்னதாக காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.



இது 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பிரச்னை. இதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது அது நிறைவேறியுள்ளது. “இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாள். நாடு முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!