undefined

“அனைவரும் சந்தோஷமா, ஆரோக்கியமாக வாழ வேண்டுகிறேன்” - நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த், “அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறினார்.

பண்டிகை நாளை ஒட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு காலை முதலே ரசிகர்கள் திரண்டனர். மழையும் பெய்தபோதிலும் தலைவரை பார்க்க ரசிகர்கள் அங்கிருந்து நகராமல் காத்திருந்தனர். இதனை கவனித்த ரஜினிகாந்த், வீட்டின் முன்புறம் வந்து கையசைத்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

அவரை பார்த்த ரசிகர்கள் “தலைவா! தலைவா!” என்று உற்சாக முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “எல்லோருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் ரஜினிகாந்தின் வழக்கம் இந்த ஆண்டும் தொடர்ந்தது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?