undefined

நடிகர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்... அமைச்சர் மா.சுப்பிரமணியன்... !!

 

 தமிழ் திரையுலகின் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவரும் தேமுதிக  வின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சனிக்கிழமை   தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரசிகர்கள் பலர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் விஜயகாந்த்  வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக   விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் நடிகர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது “  அதற்கு பதிலளித்த அவர், ‘” விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள  சென்னை தனியார்   மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைபேசியில் பேசினேன். ஏற்கெனவே சிறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மழை நேரத்தில் அனைவருக்கும் வழக்கமாக வரும்  இருமலும் தொடர் மூச்சு திணறலும் இருந்து வருகிறது.  அதற்காக சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால் தேவைப்படும் போது செயற்கை சுவாசமும்  அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் நல்ல முறையில் அவர் இருக்கிறார். விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ என அமைச்சர் கூறியுள்ளார்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!