யுனிசெப் தூதரானார் நடிகை கீர்த்தி சுரேஷ்... குழந்தைகள் நல உரிமைக்காக புதிய பொறுப்பு!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், யுனிசெப்பின் (UNICEF) குழந்தைகள் நலத்திற்கான தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
தயாரிப்பாளர்-நடிகர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதியினரின் மகளான கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாகவே திரையுலகில் அறிமுகமானார். 2013ஆம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய அவர், தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
சாவித்ரி வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த நடிகையர் திலகம் படத்தில் அவர் வெளிப்படுத்திய ஆழமான நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டியிருந்தனர். தற்போது ரிவால்வர் ரீட்டா, தோட்டம், இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் உள்ளிட்ட பல திட்டங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், யுனிசெப் தூதரானதற்கான மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெப் தூதராக இணைவது எனக்கு பெருமை. ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையுடனும் வளர வேண்டும். கடந்த 76 ஆண்டுகளாக இதற்காக உழைத்து வரும் யுனிசெப்பின் பணியில் ஈடுபடுவது எனக்கு பெரும் பொறுப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த புதிய பொறுப்பு, குழந்தைகள் நல உரிமைக்கான உணர்வை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூக வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!