நடிகை மேகா ஆகாஷூக்கு திருமணம்... நீண்ட நாள் காதலரைக் கரம் பிடிக்கிறார்... குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை மேகா ஆகாஷூக்கு திருமண நிச்சயமாகி உள்ள நிலையில், தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மேகா ஆகாஷ். பின்பு கெளதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் இவர் நடித்த சில படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார். இப்போது சத்தமே இல்லாமல் தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவுடன் திருமண நிச்சயதார்த்தத்தை நேற்று முடித்துள்ளார் மேகா ஆகாஷ்.
உறவினர்கள்-நண்பர்கள் முன்னிலையில் கேரளாவில் எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்தப் புகைப்படங்களை மேகா ஆகாஷ் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‘என்னுடைய விஷ் (Vish) உண்மையாகி உள்ளது’ என்றும் தனது மகிழ்ச்சி, சந்தோஷம், சிரிப்பு எல்லாமே இவர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும் திரைத்துறையினரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!